முதற்பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 6

தீவினைகளைப் புரிந்தவனான என்னுடைய
Updated on
1 min read

வினையேன் வினைதீர் மருந்துஆனாய், விண்ணோர்
                                                                         தலைவா, கேசவா,
மனைசேர் ஆயர் குலமுதலே, மாமாயவனே, மாதவா,
சினைஏய் தழைய மராமரங்கள் ஏழும் எய்தாய், சிரீதரா,
இனையாய், இனையபெயரினாய் என்று நைவன் அடியேனே.

தீவினைகளைப் புரிந்தவனான என்னுடைய வினைகளைத் தீர்க்கும் மருந்தானவனே, விண்ணோர் தலைவனே, குடிசைகளில் வாழும் ஆயர்குலத்தின் முதல்வனே, பெரும் மாயங்களைச் செய்கிறவனே, மாதவனே, கிளைகளும் தழைகளுமாக நின்ற மராமரங்கள் ஏழையும் அம்புஎய்து துளைத்தவனே, சிரீதரனே... இப்படியெல்லாம் உன்னுடைய தன்மைகளைச் சொல்லி, பெயர்களைச் சொல்லி நான் நைவேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com