முதற்பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 11

தீது, அவம் என்கிற குணங்கள் அவனுக்கு இல்லை
Updated on
1 min read

மாதவன்பால் சடகோபன்
தீது,அவம்இன்றி உரைத்த
ஏதம்இல் ஆயிரத்து இப்பத்து
ஓதவல்லார் பிறவாரே.

எம்பெருமான் தன்னுடைய சிறப்பை எண்ணி அடியவர்களுக்கு அருளாமலிருப்பதில்லை, அவர்களுடைய சிறுமையை எண்ணி அவர்களைக் கைவிடுவதில்லை, ஆக, தீது, அவம் என்கிற குணங்கள் அவனுக்கு இல்லை, மாதவனின் இந்தத் தன்மையைப் பத்து பாடல்களில் உரைத்தார் சடகோபர், அவர் பாடிய ஆயிரம் திருப்பாடல்களில் இந்தப் பத்தையும் ஓதவல்லவர்கள் மீண்டும் இவ்வுலகில் பிறக்காத வரம் பெறுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com