வைப்பாம், மருந்தாம், அடியரை வல்வினைத்
துப்பாம் புலன்ஐந்தும் துஞ்சக்கொடான் அவன்,
எப்பால் எவர்க்கும் நலத்தால் உயர்ந்து உயர்ந்து
அப்பால் அவன் எங்கள் ஆயர்கொழுந்தே.
எல்லாரையும்விடச் சிறந்த குணங்களைக்கொண்டவன், அனைவரையும் கடந்து சிறந்து விளங்கும் தெய்வம், எங்கள் ஆயர்கொழுந்து, எம்பெருமான், ஐம்புலன்களும் வல்வினைகளைச் செய்யத்தூண்டும் வலிமையைக் கொண்டவை, தன்னுடைய பக்தர்கள் அந்த ஐம்புலன்களின் வலையில் சிக்கிவிடாதபடி அவன் காப்பான், அவனே பக்தர்களுக்குச் செல்வம், வினைகளைப் போக்கும் மருந்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.