எளிவரும் இயல்வினன், நிலை,வரம்புஇல பல பிறப்பாய்
ஒளிவரும் முழுநலம் முதல்இல, கேடுஇல, வீடாம்
தெளிதரு நிலைமை அதுஒழிவுஇலன் முழுவதும், இறையோன்,
அளிவரும் அருளினோடு அகத்தனன், புறத்தனன் அமைந்தே.
எம்பெருமான் ஒரு நிலை, ஓர் எல்லை இல்லாத பல பிறப்புகளை எடுத்து, நமக்கென எளிமையாக வந்தவன், ஒளிநிறைந்த, சிறந்த குணங்களைக்கொண்டவன், அத்தகைய குணங்கள் அவனிடம் வருவதும் இல்லை, அவனைவிட்டுச் செல்வதும் இல்லை (எப்போதும் அவனிடம் நற்குணங்கள் நிறைந்திருக்கின்றன.)
மோட்சம் என்கிற தெளிவான நிலையை முழுவதுமாக அருள்பவன் அவன், அன்போடும் அருளோடும் பக்தர்களுக்குள் தங்கியிருப்பவன், மற்றவர்களுக்கு அகப்படாமல் வெளியிலே திகழ்பவன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.