முதற்பத்து மூன்றாம் திருவாய்மொழி - 8

திருமகள் கணவனான எம்பெருமானின்
Updated on
1 min read

நாளும் நின்று அடும் நம் பழமை அம் கொடுவினையுடனே
மாளும், ஓர் குறைவுஇல்லை, மனன்அகம் மலம்அறக் கழுவி
நாளும் நம் திருஉடை அடிகள்தம் நலம்கழல் வணங்கி
மாளும் ஓர் இடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே.

நம் மனத்திலிருக்கும் குற்றங்களை அகற்றி, திருமகள் கணவனான எம்பெருமானின் நன்மை தரும் திருவடிகளை வணங்கினால், என்றைக்கும் நின்று துன்புறுத்துகிற நம்முடைய பழைய தீவினைகளெல்லாம் முற்றிலும் தீர்ந்துவிடும், அதன்பிறகு நமக்கு ஒரு குறையும் இருக்காது.

உயிர் போகும்போதும் அவனை வணங்கியபடி உயிர் துறப்பதுதான் சிறப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com