முதற்பத்து மூன்றாம் திருவாய்மொழி - 9

எம்பெருமானுக்கு வலப்பக்கத்தில் உள்ளான்.
Updated on
1 min read

வலத்தனன் திரிபுரம் எரித்தவன் இடம்பெற, துந்தித்
தலத்து எழு திசைமுகன் படைத்த நல்உலகமும் தானும்
புலப்படப் பின்னும் தன் உலகத்தில் அகத்தனன்தானே,
சொலப்புகில் இவைபின்னும் வயிற்றுஉள இவை அவன்
                                                                                          துயக்கே.

திரிபுரங்களை எரித்தவனான சிவபெருமான், எம்பெருமானுக்கு வலப்பக்கத்தில் உள்ளான்.

சிறப்புடைய பிரம்மன், தான் படைத்த உலகத்தோடு எம்பெருமானின் திருநாபியிலே புலப்படுகிறான்.

இப்பெருமானின் குணங்களைச் சொல்ல ஆரம்பித்தால் இன்னும் பல உண்டு. இவற்றைக்கொண்டு அவன் பக்தர்களை மயங்கச் செய்கிறான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com