முதற்பத்து மூன்றாம் திருவாய்மொழி - 10

எம்பெருமானின் கலக்கமில்லாத நெஞ்சில்
Updated on
1 min read


துயக்குஅறு மதியில் நல்ஞானத்துள் அமரரைத் துயக்கும்
மயக்குஉடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்,
புயல் கருநிறத்தனன், பெரு, நிலம்கடந்த நல் அடிப்போது
அயர்ப்புஇலன் அலற்றுவன், தழுவுவன், வணங்குவன் அமர்ந்தே.

எம்பெருமானின் கலக்கமில்லாத நெஞ்சில் பிறந்தவர்கள் அமரர்கள், நல்ல ஞானமுள்ளவர்கள், அவர்களையே கலங்கவைக்கும் வண்ணம் வானைவிடப் பெரிய அவதாரங்களை எடுக்கவல்லவன் எம்பெருமான், மேகம்போன்ற கருநிறத்தைக்கொண்டவன், அவனது பெரிய, உலகை அளந்த, நல்ல திருவடிமலர்களில் அமர்வேன், அவனை மறவாமல் போற்றுவேன், தழுவுவேன், வணங்குவேன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com