முதற்பத்து மூன்றாம் திருவாய்மொழி - 11

சடகோபன் வணங்கிச்செய்த தொண்டு
Updated on
1 min read

அமரர்கள் தொழுதுஎழ அலைகடல் கடைந்தவன்தன்னை
அமர்பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை ஆயிரத்து அவற்றினுள் இவைபத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அம்சிறையே.

அமரர்கள் எல்லாரும் தொழுது எழும்படி அலைகடலைக் கடைந்தவன் எம்பெருமான், அத்தகைய எம்பெருமானை, சோலைகள் நிறைந்த, வளம் மிகுந்த திருக்குருகூரைச் சேர்ந்த சடகோபன் வணங்கிச்செய்த தொண்டு, சுவையமைந்த ஆயிரம் பாடல்கள்.

அவற்றிலே இந்தப் பத்தையும் சொல்ல வல்லவர்கள் அமரர்களைப்போல் உயர்வார்கள், பிறவியாகிய கொடிய சிறையிலிருந்து விடுபடுவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com