உள்ளிலும் உள்ளம் தடிக்கும், வினைப்படலம்
விள்ள விழித்துஉன்னை மெய்உற்றால், உள்ள
உலகுஅளவு யானும் உளன்ஆவன் என்கொல்,
உலகுஅளந்த மூர்த்தி! உரை.
எம்பெருமானே, உலகை அளந்த மூர்த்தியே,
உன்னை நினைத்தாலே என் உள்ளம் பூரிக்கிறது,
வெறுமனே நினைத்ததற்கே இப்படியென்றால், என்னுடைய வினைகளெல்லாம் நீங்கி நான் நிஜமாகவே உன்னை வந்தடைந்துவிட்டால், மகிழ்ச்சியில் நான் இன்னும் தடித்துத் தடித்து உலகத்தைப்போல் பெரிதாகிவிடுவேனோ? சொல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.