உரைக்கில் ஓர் சுற்றத்தார், உற்றார்என்று ஆரே?
இரைக்கும் கடல்கிடந்த எந்தாய், உரைப்புஎல்லாம்
நின்அன்றி மற்றுஇலேன் கண்டாய், எனது உயிர்க்குஓர்
சொல்நன்றி ஆகும் துணை.
சத்தமிடும் கடலிலே, கிடந்த திருக்கோலத்தில் அருள்செய்யும் எங்கள் தந்தையே,
சிந்தித்துப் பார்த்தால், நீ மட்டும்தானே எங்களுக்கு உறவு? நாங்கள் சுற்றம் என்றும் உறவு என்றும் சொல்லிக்கொள்ள வேறு யார் இங்கே இருக்கிறார்கள்?
எங்களுடைய ஆத்மாவுக்கு ஒரே சொல்லால் உதவிசெய்கிற துணை நீ, மற்ற அனைத்துவகைத் துணையும் நீ, உன்னையன்றி வேறு யாரையும் நாங்கள் துணையாக எண்ணுவதில்லை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.