துணை, நாள், பெரும்கிளையும் தொல்குலமும்
சுற்றத்துஇணை நாளும் இன்புஉடைத்தாம் ஏலும், கணைநாணில்
ஓவாத்தொழில் சார்ங்கன் தொல்சீரை நல்நெஞ்சே,
ஓவாத ஊணாக உண்.
நல்ல நெஞ்சமே,
சிறந்த துணைவர்கள், நீண்ட ஆயுள், பெருகி வளர்ந்த குடும்பம், பழைமைப் பெருமை கொண்ட குலம், சுற்றத்தாரோடு இணைந்து வாழ்தல் போன்ற உலக இன்பங்களில் நீ மகிழ்ச்சிகொள்கிறாய்,
இனி, இவற்றைப் பெரிதாக எண்ணாதே, வில்லில் நாணை வைத்து ஓயாமல் பகைவர்களை அழிக்கிற பெருமைகொண்ட எம்பெருமானின் சிறப்புகளையே உணவாகத் தொடர்ந்து உண்டுவா, அவனை அனுபவி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.