நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 81

அழகிய திருப்பாற்கடலிலே கண்வளரும்
Updated on
1 min read

பகல், இரா என்பதுவும் பாவியாது, எம்மை
இகல்செய்து இருபொழுதும் ஆள்வர், தகவாத்
தொழும்பர் இவர், சீர்க்கும் துணைஇலர் என்றுஓரார்,
செழும்பரவை மேயார் தெரிந்து.

அழகிய திருப்பாற்கடலிலே கண்வளரும் எம்பெருமான் என்னைப் பார்த்து, 'இவன் தகுதியில்லாதவன், எனக்குத் துணையாகும் சிறப்பு இவனுக்கு இல்லை' என்றெல்லாம் எண்ணுவதில்லை, இரவு, பகல் பார்க்காமல் எந்நேரமும் வலுக்கட்டாயமாக என்னை ஆட்கொள்கிறான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com