நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 82

மான் போன்ற மாயத்தோற்றத்தில்
Updated on
1 min read

தெரிந்துஉணர்வுஒன்றுஇன்மையால், தீவினையேன்
வாளா இருந்துஒழிந்தேன் கீழ்நாள்கள்எல்லாம், கரந்துஉருவில்
அம்மானை அந்நான்று பின்தொடர்ந்த ஆழிஅம்கை
அம்மானை ஏத்தாது அயர்ந்து.

அன்றைக்கு மான் போன்ற மாயத்தோற்றத்தில் வந்த மாரீசனைப் பின்தொடர்ந்து வீழ்த்தியவன், அழகிய கைகளில் சக்ராயுதத்தைக்கொண்டவன், எம்பெருமான்,

புத்திசாலித்தனம் இல்லாத தீவினையேனாகிய நான், அந்த அம்மானைப் போற்றாமல் வீணாகப் பல நாள்களைக் கழித்துவிட்டேன். (இனி அவனை எண்ணுவேன்).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com