அயர்ப்பாய், அயராப்பாய் நெஞ்சமே, சொன்னேன்
உயப்போம் நெறிஇதுவே கண்டாய், செயற்பால
அல்லவே செய்கிறுதி நெஞ்சமே, அஞ்சினேன்,
மல்லர்நாள் வவ்வினனை வாழ்த்து.
நெஞ்சமே,
நீ செய்யக்கூடாதவற்றையே செய்வாய் என்று எனக்கு அச்சமாக இருக்கிறது,
மல்லர்களோடு போரிட்டு அவர்களுடைய வாழ்நாளை முடித்தவன் எம்பெருமான், அவனையே நீ எந்நேரமும் வாழ்த்திக்கொண்டிரு, நீ உய்வதற்கான வழி இதுதான்,
நான் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டேன், இனி கேட்பதும் விடுவதும் உன் விருப்பம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.