நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 84

திருவடிகளில் பூக்களைப் போட்டு,
Updated on
1 min read

வாழ்த்தி அவன்அடியைப் பூப்புனைந்து, நின்தலையைத்
தாழ்த்து இருகை கூப்புஎன்றால் கூப்பாது, பாழ்த்தவிதி,
எங்குஉற்றாய் என்றுஅவனை ஏத்தாது, என்நெஞ்சமே,
தங்கத்தான் ஆமேலும் தங்கு.

பாழும் விதியைக்கொண்ட என் நெஞ்சமே,

எம்பெருமானை வாழ்த்து, அவனுடைய திருவடிகளில் பூக்களைப் போட்டு, உன்னுடைய தலையைத் தாழ்த்தி, இரு கைகளையும் குவித்து வணங்கு என்றால், நீ வணங்க மறுக்கிறாய்,

இனிமேலாவது நீ எம்பெருமானை வணங்கி, 'எங்கே இருக்கிறாய் ஐயா' என்று தேடித் துதிப்பாயாக, அப்படிச் செய்யாமல் இருப்பதுதான் உன் விருப்பம் என்றால் அப்படியே இருந்துவிடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com