நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 86

எம்பெருமான் கார்மேகத்தின் வண்ணத்தை
Updated on
1 min read

கார்கலந்த மேனியான், கைகலந்த ஆழியான்,
பார்கலந்த வல்வயிற்றான், பாம்புஅணையான், சீர்கலந்த
சொல்நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ்துயரை
என்நினைந்து போக்குவர் இப்போது?

எம்பெருமான் கார்மேகத்தின் வண்ணத்தைக்கொண்ட திருமேனியுள்ளவன், கையில் சக்ராயுதத்தை ஏந்தியவன், உலகையே உண்ட வலிமையான வயிற்றைக் கொண்டவன், பாம்புப் படுக்கையில் கண்வளர்கிறவன்,

அத்தகைய பெருமானின் பெருமைகளைச் சொல்லும் சொற்களை நினைத்தால், சூழ்ந்துவருகிற வினையால் ஏற்படும் மிகுந்த துன்பம் போகும், அவ்வாறு தங்கள் துன்பத்தைப் போக்கிக்கொள்ளாதவர்கள் வேறு எதையெண்ணி நேரத்தைப் போக்குவார்கள்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com