இரண்டாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 1, 2

கஜேந்திரன் என்கிற யானை
Updated on
1 min read

எம்மா வீட்டுத் திறமும் செப்பம், நின்
செம்மா பாதபற்புத் தலைசேர்த்து, ஒல்லை
கைம்மாத் துன்பம் கடிந்த பிரானே,
அம்மா, அடியேன் வேண்டுவது இஃதே.

கஜேந்திரன் என்கிற யானை துன்பப்பட்டபோது விரைந்து வந்து அதன் துன்பத்தைத் தீர்த்த பிரானே, எங்கள் பெருமானே, எந்தவிதமான மோட்சத்தைப் பற்றியும் நாங்கள் பேசுவதில்லை, எதிர்பார்ப்பதில்லை, நாங்கள் வேண்டும் சுகம், உன்னுடைய சிறந்த, உயர்ந்த திருவடித் தாமரைகளை எங்கள் தலையில் சேர்த்துக்கொள்ளும் பாக்கியம்தான். அதைத் தந்தருள்வாய்.

•••

பாடல் - 2

இஃதே யான் உன்னைக் கொள்வது எஞ்ஞான்றும், என்
மய்தோய் சோதி மணிவண்ண, எந்தாய்,
எய்தா நின்கழல் யான் எய்த, ஞானக்
கய்தா, காலக் கழிவு செய்யேலே.

ஒளிவீசும் சோதியைக்கொண்ட மணிவண்ணனே, எங்கள் தந்தையே, நாங்கள் எப்போதும் உன்னிடம் கேட்பது ஒரு விஷயம்தான்: நாங்களே முயற்சி செய்து உன்னுடைய திருவடிகளை எட்டமுடியாது, ஆகவே, ஞானம் என்கிற கையைக்கொடு, தாமதம் வேண்டாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com