இரண்டாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 3, 4

கண்ணனிடம் நான் வேண்டுகின்ற
Updated on
1 min read

செய்யேல் தீவினை என்று அருள்செய்யும் என்
கய்யார் சக்கரக் கண்ணபிரானே,
அய்யார் கண்டம் அடைக்கிலும் நின்கழல்
எய்யாது ஏத்த அருள்செய் எனக்கே.

கையில் சக்ராயுதத்தை ஏந்திய எங்கள் கண்ணபிரானே, 'தீவினைகளைச் செய்யாதீர்கள்' என்று சொல்லி எங்களுக்கு அருள் செய்கிறாய், பின்னாளில் கோழை வந்து எங்கள் கழுத்தை அடைக்கிற அந்தப் பொழுதிலும், உன்னுடைய திருவடிகளை நாங்கள் மறக்காமல் போற்ற வேண்டும், அதற்கு அருள்செய்.

•••

பாடல் - 4

'எனக்கே ஆட்செய் எக்காலத்தும்' என்று என்
மனக்கே வந்து இடைவீடு இன்றி மன்னித்
தனக்கேயாக எனைக்கொள்ளும் ஈதே
எனக்கே கண்ணனை யான்கொள் சிறப்பே.

கண்ணனிடம் நான் வேண்டுகின்ற சிறந்த வரம் எது தெரியுமா? அவன் என் மனத்தில் வந்து குடியேற வேண்டும், இடைவெளியில்லாமல் நிலைத்திருக்க வேண்டும், தனக்கே உரிமையாக என்னைக் கொள்ள வேண்டும், 'என்றைக்கும் எனக்கு அடிமையாக இரு' என்கிற எண்ணத்தை என் மனத்தில் ஏற்படுத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com