இரண்டாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

மகிழ்ச்சியை உடைய தெய்வங்கள்
Updated on
1 min read

சிறப்பில் வீடு, சுவர்க்கம், நரகம்
இறப்பில் எய்துக, எய்தற்க, யானும்
பிறப்புஇல் பல்பிறவிப் பெருமானை
மறப்பு ஒன்று இன்றி என்றும் மகிழ்வனே.

நான் இறக்கும் நேரத்தில், சிறந்த மோட்சத்தையோ சுவர்க்கத்தையோ நரகத்தையோ அடையலாம், அடையாமலும் இருக்கலாம், அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை.  பிறப்பில்லாதவன், அதேசமயம் நமக்காகப் பல பிறவிகளை எடுக்கிறவன், அந்தப் பெருமானை மறக்காமல் என்றும் நினைப்பேன், மகிழ்வேன்.

•••

பாடல் - 6

மகிழ்கொள் தெய்வம், உலோகம், அலோகம்,
மகிழ்கொள் சோதி மலர்ந்த அம்மானே,
மகிழ்கொள் சிந்தை, சொல், செய்கை கொண்டு என்றும்
மகிழ்வுற்று உன்னை வணங்க வாராயே.

எம்பெருமானே, மகிழ்ச்சியை உடைய தெய்வங்கள், காணும் பொருள்கள், காணமுடியாத பொருள்கள், மகிழ்ச்சி தரும் சோதிவடிவங்கள் என அனைத்தாகவும் மலர்ந்திருக்கும் பெருமானே, மகிழ்ச்சியான சிந்தனை, சொல், செய்கையைக்கொண்டு என்றும் மகிழ்வோடு நான் உன்னை வணங்குவேன், நீ இங்கு எழுந்தருளி எனக்கு அருள்வாய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com