

பாடல் - 11
தொழுது ஆடித் தூமணிவண்ணனுக்கு ஆள்செய்து நோய்தீர்ந்த
வழுவாத தொல்புகழ் வண்குருகூர்ச் சடகோபன் சொல்
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்
தொழுது ஆடிப்பாட வல்லார் துக்கசீலம் இலர்களே.
தூய மணிவண்ணனைத் தொழுது ஆடி, அவனுக்கு அடிமையாகித் தொண்டுசெய்து தன்னுடைய நோய்களைத் தீர்த்துக்கொண்டவர், குற்றமில்லாத, பழைமையான புகழைக்கொண்ட, வளம் நிறைந்த குருகூர்ச் சடகோபர், அவர் பாடிய குற்றமற்ற ஆயிரம் பாடல்களில் இந்தப் பத்து பாடல்களும் வெறியாடலைப்பற்றியவை, இந்தப் பத்து பாடல்களையும் பாடித் தொழுது ஆடவல்லவர்களுக்கு என்றும் துயரமில்லை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.