நான்காம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

சக்ராயுதத்தைக் கொண்டவனே
நான்காம் பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 5, 6
Updated on
1 min read

பாடல் - 5

அப்பனே, அடல் ஆழியானே, ஆழ்கடலைக் கடைந்த
துப்பனே, உன் தோள்கள் நானும் கண்டிடக்கூடும்கொல் என்று
எப்பொழுதும் கண்ணநீர் கொண்டு, ஆவி துவர்ந்து துவர்ந்து
இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே.

எங்கள் தந்தையே, வலிமையுடைய சக்ராயுதத்தைக் கொண்டவனே, ஆழமான கடலைக் கடைந்த வலிமையுடையவனே, உன்னுடைய தோள்களைக் காணும் பாக்கியம் எனக்குக் கிடைக்குமா என்று நான் ஏங்குகிறேன், அதை எண்ணி எப்பொழுதும் என் கண்களில் நீர் வழிகிறது, என் உயிர் உலர்கிறது, 'இப்போதே வரமாட்டாயா' என்று அறிவற்றவனான நான் உன்னைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

*******

பாடல் - 6

நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் யான் எனது ஆவியுள்ளே
நாக்குநீள்வன், ஞானம் இல்லை, நாள்தோறும் என்னுடைய
ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும், அல்ல புறத்தினுள்ளும்
நீக்கம் இன்றி எங்கும் நின்றாய் நின்னை அறிந்து அறிந்தே.

எம்பெருமானே, ஒவ்வொரு நாளும், என்னுடைய உடலிலும் உயிரிலும் மற்ற வெளிப்புலன்களிலும் நீயே நீக்கமின்றி நிறைந்திருக்கிறாய், இது எனக்கு நன்றாகத் தெரியும், ஆனாலும், உன்னைக் காண வேண்டும் என்று நான் உள்ளுக்குள் ஆசைப்படுகிறேன், எல்லாத் திசைகளிலும் உன்னைத் தேடுகிறேன், இதற்குக் காரணம், எனக்கு ஞானமில்லாததுதான். (ஞானம் வந்துவிட்டால், இந்த ஏக்கம் இருக்காது, எங்கும் இருக்கிற உன்னை உணர்ந்து மகிழ்வேன்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com