

பாடல் - 11
தழுவிநின்ற காதல்தன்னால் தாமரைக்கண்ணன்தனைக்
குழுவுமாடம் தென்குருகூர் மாறன் சடகோபன் சொல்
வழுஇலாத ஒண் தமிழ்கள் ஆயிரத்துள் இப்பத்தும்
தழுவப் பாடி ஆடவல்லார் வைகுந்தம் ஏறுவரே.
மாடங்கள் நெருங்கிநிற்கின்ற தென்குருகூர் மாறன் சடகோபன், தாமரைக்கண்ணனான எம்பெருமான் மீது மிகுந்த அன்பு கொண்டார், அதனால், குற்றமில்லாத, ஒளிநிறைந்த ஆயிரம் தமிழ்ப்பாடல்களால் அவரைப் பாடினார், அந்த ஆயிரத்துள் இந்தப் பத்து பாடல்களையும் கருத்தறிந்து பாடி ஆடவல்லவர்கள் வைகுந்தம் ஏறுவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.