நான்காம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 11

உயர்ந்த சுடர்வடிவாக
நான்காம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 11
Updated on
1 min read

பாடல் - 11

திருவடியை, நாரணனை, கேசவனை, பரம்சுடரைத்
திருவடி சேர்வது கருதிச் செழும் குருகூர்ச் சடகோபன்
திருவடிமேல் உரைத்த தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும்
திருவடியே அடைவிக்கும், திருவடி சேர்ந்து ஒன்றுமினே.

அனைவருக்கும் தலைவன், நாரணன், கேசவன், உயர்ந்த சுடர்வடிவாகத் திகழ்கிறவன், எம்பெருமான், அப்பெருமானின் திருவடிகளைச் சேர எண்ணினார் செழுமையான குருகூர்ச் சடகோபர், அதற்காக, எம்பெருமான் திருவடிகளைப் பற்றித் தமிழில் ஆயிரம் திருப்பாடல்களை வழங்கினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் சொல்கிறவர்கள் அப்பெருமானின் திருவடிகளையே சேர்வார்கள், அனைவரும் அந்தத் திருவடிகளின்கீழ் சென்று, அவனுக்குத் தொண்டு செய்யுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com