

பாடல் - 11
மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு
மதுசூதபிரான் அடிமேல்
நாற்றம்கொள் பூம்பொழில்சூழ் குருகூர்ச்
சடகோபன் சொன்ன
தோற்றங்கள் ஆயிரத்துள் இவையும் ஒரு
பத்தும் வல்லார்
ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகா
நிற்பர் நீராயே.
மணம் நிறைந்த பூஞ்சோலைகளால் சூழப்பட்ட குருகூர்ச் சடகோபர், மதுசூதனனாகிய பெருமான்மீது ஆயிரம் திருப்பாடல்களைப் பாடினார், அவர் பாடிய சொற்களின் தன்மையை உணர்ந்து, இந்தப் பத்துத் திருப்பாடல்களையும் பாடவல்லவர்கள், நீரூற்றுகளிலே உண்டாகும் நுண்ணிய மணலைப்போல, நீராக உருகுவார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.