முதற்பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 1

எம்பெருமான் ஒப்பற்ற பிரம்மச்சாரியாக
Updated on
1 min read

பொருமா நீள்படை ஆழி,சங்கத்தொடு
திருமா நீள்கழல் ஏழுஉலகும் தொழ
ஒருமாணிக்குறள்ஆகி நிமிர்ந்த அக்
கருமாணிக்கம் என் கண்உள்ளதுஆகுமே.

எம்பெருமான் ஒப்பற்ற பிரம்மச்சாரியாக, வாமனனாக அவதாரம் எடுத்தான், தனது போர் செய்யவல்ல, சிறந்த, நீண்ட ஆயுதங்களான சங்கு, சக்கரத்துடன், புனிதமான, சிறந்த, நீண்ட தன் திருவடிகள் ஏழு உலகும் செல்லும்படி உலகை அளந்தான், அவனை எல்லாரும் தொழுது பணிந்தார்கள், அத்தகைய கருமாணிக்கம், என் கண்களில் இருக்கிறான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com