முதற்பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல்  8

நான் அவனை நாடுவேன்
Updated on
1 min read

செல்வநாரணன் என்ற சொல்கேட்டலும்
மல்கும் கண்பனி, நாடுவன், மாயமே,
அல்லும் நல்பகலும் இடைவீடு இன்றி
நல்கி என்னைவிடான் நம்பி, நம்பியே,

'திருநாராயணன்' என்ற எம்பெருமானின் பெயரைக் கேட்டதும், என் கண்களில் நீர் பெருகும், நான் அவனை நாடுவேன், இது என்ன மாயம்! எம்பெருமான், ஆண்களில் சிறந்தவன், இரவிலும் நல்ல பகலிலும் இடைவெளியில்லாமல் எனக்கு நன்மையை நல்குகிறான், என்னைவிட்டு நீங்காதவனாகத் திகழ்கிறான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com