முதற்பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 10

ஞானத்தை அறிவது, மறப்பது என்பதெல்லாம்
Updated on
1 min read

மறப்பும் ஞானமும் நான் ஒன்று உணர்ந்திலன்,
மறக்கும் என்று செந்தாமரைக்கண்ணொடு
மறப்புஅற என்னுள்ளே மன்னினான்தன்னை,
மறப்பனோ இனி யான் என் மணியையே?

ஞானத்தை அறிவது, மறப்பது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது, (அறியாமை கொண்டவன் நான்), ஆகவே, ஒருவேளை நான் எம்பெருமானை மறந்துவிடுவேனோ என்று அவனுக்கு ஓர் எண்ணம், அதனால், நான் அவனை மறக்க இயலாதபடி தன்னுடைய செந்தாமரைக்கண்ணோடு எனக்குள் வந்து நிலைபெற்றான், அத்தகைய எம்பெருமானை, என்னுடைய நீலமணியை இனி நான் மறப்பேனோ? (மறக்கமாட்டேன்.)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com