முதற்பத்து பத்தாம் திருவாய்மொழி - பாடல் 11

நீலமணி போன்ற எம்பெருமானை
Updated on
1 min read

மணியை, வானவர் கண்ணனை, தன்னதுஓர்
அணியை, தென்குருகூர்ச் சடகோபன்சொல்
பணிசெய் ஆயிரத்துள் இவைபத்துடன்
தணிவுஇலர் கற்பரேல் கல்வி வாயுமே.

நீலமணி போன்ற எம்பெருமானை, வானவர்களின் தலைவனான கண்ணனை, தனக்குத்தானே ஆபரணம் ஆனவனை, தென்குருகூர்ச் சடகோபன் ஆயிரம் பாடல்களால் வணங்கித் தொண்டுசெய்தார், அந்த ஆயிரத்தில் இந்தப் பத்து பாடல்களையும் கற்க வேண்டும் என்ற ஆவல் தீராமல் இவற்றை வாசிக்கிறவர்கள், கல்வியின் பயனாகத் திருத்தொண்டு புரிவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com