முதற்பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 7

எம்பெருமானை எனக்குள் இருத்துவேன்
Updated on
1 min read

யான்ஒட்டி என்னுள் இருத்துவன் என்றிலன்,
தான்ஒட்டிவந்து என் தனிநெஞ்சை வஞ்சித்து
ஊன்ஒட்டி நின்று என் உயிரில் கலந்து இயல்-
வான் ஒட்டுமோ இனி என்னை நெகிழ்க்கவே?

'எம்பெருமானை எனக்குள் இருத்துவேன்' என்று நான் எண்ணவில்லை, எனக்குள் இருக்கவேண்டும் என்றெண்ணி அவனே வந்தான், தனிமையிலிருக்கும் என் நெஞ்சை வஞ்சித்தான், உடலிலும் உயிரிலும் கலந்தான், இத்தகைய தன்மைகொண்ட எம்பெருமானைவிட்டு நான் விலகிச்செல்ல முயன்றால், அவன் சம்மதிப்பானா? (மாட்டான்!)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com