முதற்பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 9

அமரர்களுடைய அனைத்துச் செயல்களுக்கும்
Updated on
1 min read

அமரர் முழுமுதல்ஆகிய ஆதியை,
அமரர்க்கு அமுதுஈந்த ஆயர்கொழுந்தை
அமர அழும்பத் துழாவி என் ஆவி
அமரத் தழுவிற்று, இனி அகலும்மோ?

அமரர்களுடைய அனைத்துச் செயல்களுக்கும் காரணமாகத் திகழ்கிற ஆதி, அமரர்களுக்கு அமுதம் தந்த ஆயர்கொழுந்து எம்பெருமான், அத்தகைய பெருமானை என் ஆவி நெருங்கிக் கலந்து அனுபவித்தது, பிரிக்க இயலாதபடி தழுவியது, இனி அது அவனைவிட்டு அகலுமா? (அகலாது!)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com