முதற்பத்து ஏழாம் திருவாய்மொழி - பாடல் 10

அவனும் விலகிநிற்பான்
Updated on
1 min read

அகலில் அகலும், அணுகில் அணுகும்,
புகலும் அரியன், பொருவுஅல்லன் எம்மான்,
நிகர்இல் அவன்புகழ் பாடி இளைப்புஇலம்
பகலும் இரவும் படிந்து குடைந்தே.

எம்பெருமானைவிட்டு நாம் விலகிநின்றால், அவனும் விலகிநிற்பான், நெருங்கி நின்றால், அவனும் நெருங்கிவருவான், பகைவர்களால் அவனை நெருங்க இயலாது, பக்தர்கள் அவனை நெருங்க எந்தத் தடையும் கிடையாது, நிகரில்லாத அவனுடைய புகழைப் பகலும் இரவும் பாடுவோம், கலந்து கொண்டாடுவோம், அவனை ஒருபோதும் பிரியாமலிருப்போம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com