முதற்பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 1

ஒப்பற்ற எம்மான், கண்ணபிரான், என் அமுதம்
Updated on
1 min read

இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவரும்
யவையும் யவரும் தன்உள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனிமுதல் எம்மான் கண்ணபிரான், என் அமுதம்,
சுவையன், திருவின் மணாளன் என்னுடைச் சூழல்உளானே.

அருகிலுள்ளவை, தொலைவிலுள்ளவை, நடுவிலுள்ளவை ஆகிய அனைத்து அஃறிணைப் பொருள்கள், அருகிலுள்ளோர், தொலைவிலுள்ளோர், நடுவிலுள்ளோர் ஆகிய அனைத்து உயர்திணைப் பொருள்கள்... இவை எல்லாவற்றையும் தனக்குள் சேர்க்கிறவன், அவற்றைப் படைத்துக் காத்து அவற்றின் உயிராகத் திகழ்கிறவன் எம்பெருமான், அத்தகைய ஒப்பற்ற எம்மான், கண்ணபிரான், என் அமுதம், சுவை மிகுந்தவன், திருமகளின் கணவன் என்னருகே உள்ளானே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com