முதற்பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 2

பல அவதாரங்களை எடுக்கவல்லவன்
Updated on
1 min read

சூழல் பலபல வல்லான், தொல்லை அம்காலத்து உலகைக்
கேழல் ஒன்றுஆகி இடந்த கேசவன், என்னுடை அம்மான்,
வேழ மருப்பை ஒசித்தான், விண்ணவர்க்கு எண்ணல் அரியான்,
ஆழ நெடும்கடல் சேர்ந்தான், அவன் என் அருகல்இலானே.

பல அவதாரங்களை எடுக்கவல்லவன், பழங்காலத்தில் வராக அவதாரமெடுத்து அழகிய உலகைக் கொம்பால் குத்தி மேலே கொண்டுவந்த கேசவன், என் அம்மான்,  வலயாபீடம் என்கிற யானையின் கொம்பை முறித்தவன், விண்ணவர்களு எண்ண இயலாதபடி அரியவன், ஆழமான நீண்ட கடலிலே பள்ளிகொள்கிறவன், அத்தகைய எம்பெருமான், என் அருகில் இருக்கிறானே!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com