ஒக்கலை வைத்து முலைப்பால் உண் என்று தந்திட வாங்கிச்
செக்கம் செக என்று அவள்பால் உயிர்செக உண்ட பெருமான்,
நக்கபிரானோடு அயனும் இந்திரனும் முதலாக
ஒக்கவும் தோன்றிய ஈசன், மாயன் என் நெஞ்சின்உளானே.
பூதனை மாய உருவத்தில் எம்பெருமானைக் கொல்ல வந்தாள். கண்ணனை இடுப்பில் வைத்துக்கொண்டு 'முலைப்பால் உண்பாயாக' என்று தந்தாள். எம்பெருமான் அவளுடைய முலைப்பாலை வாங்கி உண்டான். கொல்லும் நோக்கத்துடன் வந்த அவளுடைய உயிர் போகும்படி செய்தான். சிவபெருமான், பிரம்மன், இந்திரன் தொடங்கி அனைவரையும் தோற்றுவித்த சிறப்பைக் கொண்டவன், மாயன், அவன் என் நெஞ்சில் உள்ளானே!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.