முதற்பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 8

நாவிலே நின்று மலர்கின்ற ஞானக்கலைகள்
Updated on
1 min read

நாவினுள் நின்றுமலரும் ஞானக்கலைகளுக்குஎல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே, அழிப்போடு அளிப்பவன் தானே,
பூஇயல் நால் தடம்தோளன், பொருபடை ஆழி,சங்கு ஏந்தும்
காவி நல்மேனிக் கமலக்கண்ணன் என் கண்ணின்உளானே.

நாவிலே நின்று மலர்கின்ற ஞானக்கலைகள் அனைத்துக்கும் உயிரும் உடலும் எம்பெருமானே, அவற்றை அழிப்பதும் காப்பதும் அவனே, பூப்போன்ற நான்கு பெரிய திருத்தோள்களைக் கொண்டவன், போர் செய்யும் ஆயுதங்களான சக்ராயுதம், சங்கை ஏந்தியிருப்பவன், நீலோற்பவமலர் போன்ற நல்ல திருமேனியைக் கொண்டவன், தாமரைக்கண்ணன், அவன் என் கண்ணில் உள்ளானே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com