முதற்பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 9

தாமரைபோன்ற கண்களைக்கொண்ட
Updated on
1 min read

கமலக்கண்ணன் என் கண்ணின்உள்ளான், காண்பன், அவன்
                                               கண்களாலே
அமலங்களாக விழிக்கும், ஐம்புலனும் அவன்மூர்த்தி,
கமலத்து அயன் நம்பிதன்னைக் கண்நுதலானொடும் தோற்றி
அமலத்தெய்வத்தோடு உலகம்ஆக்கி என் நெற்றிஉளானே.

தாமரைபோன்ற கண்களைக்கொண்ட எம்பெருமான் என் கண்ணெதிரே தோன்றினான், நான் அவனைக் கண்டேன், அவனும் தன் கண்களால் என்னைக் கண்டான், என்னுடைய குற்றங்கள் நீங்கும்படி செய்தான். அதனால், என்னுடைய ஐம்புலன்களும் அவனுக்கு அடிமையாகிவிட்டன, தாமரையில் வீற்றிருக்கும் சிறந்த பிரம்மனை, நெற்றிக்கண் கொண்ட சிவபெருமானை, குற்றமற்ற பிற தேவர்களை, உலகத்தையெல்லாம் படைத்தான் அவன், அத்தகைய பெருமான் என் நெற்றியில் உள்ளானே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com