முதற்பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 11

திருக்குருகூரில் பிறந்த வள்ளலான
Updated on
1 min read

உச்சிஉள்ளே நிற்கும் தேவதேவற்கு, கண்ணபிரானுக்கு
இச்சையுள் செல்ல உணர்த்தி வண்குருகூர்ச் சடகோபன்
இச்சொன்ன ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய நீள்கழல் சென்னி பொருமே.

திருக்குருகூரில் பிறந்த வள்ளலான சடகோபர், தனது உச்சியுள்ளே எழுந்தருளியிருக்கிற தேவதேவன், கண்ணபிரான் தம்மீது வைத்துள்ள விருப்பத்தை அறிந்தார், அதனை அவனுக்கு உணர்த்தி ஆயிரம் பாடல்களைப் பாடினார், அந்த ஆயிரத்துள் இந்தப் பத்துப் பாடல்களையும் பக்தர்கள் பாடினால், அவனுடைய நீண்ட திருவடிகள் அவர்களுடைய தலைமுடியில் சேர்த்துநிற்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com