நான்காம் பத்து ஒன்றாம் திருவாய்மொழி - பாடல் 11

திருவடிகளுக்குக் கைங்கர்யம்
Updated on
1 min read

அஃதே உய்யப்புகும் ஆறுஎன்று கண்ணன் கழல்கள்மேல்
கொய் பூம்பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்
செய் கோலத்து ஆயிரம் சீர்த்தொடைப்பாடல் இவைபத்தும்
அஃகாமல் கற்பவர் ஆழ்துயர்போய் உய்யற்பாலரே.

கொய்யக்கூடிய மலர்கள் நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட குருகூர்ச் சடகோபர், ‘கண்ணனின் திருவடிகள்தான் நாம் உய்வதற்கான வழி’ என்றார். அப்பெருமானின் திருவடிகளுக்குக் கைங்கர்யம் செய்யும்விதமாக அழகிய, சிறப்பாகத் தொடுத்த ஆயிரம் பாடல்களைப் பாடினார் அவர்,

அவற்றில் இந்தப் பத்து பாடல்களையும் குறைவின்றிக் கற்பவர்களுடைய ஆழ்ந்த துன்பங்கள் தீரும், அவர்கள் வாழ்வில் உய்வார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com