நான்காம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 5, 6

துளசிமாலையை எண்ணி
நான்காம் பத்து இரண்டாம் திருவாய்மொழி - பாடல் 5, 6
Updated on
1 min read

பாடல் - 5

தோளி சேர் பின்னைபொருட்டு எருது ஏழ் தழீஇக்
கோளியார், கோவலனார், குடக்கூத்தனார்
தாள் இணைமேல் அணி தண்அம் துழாய் என்றே
நாளும் நாள் நைகின்றதால், என்தன் மாதரே.

(தாய் சொல்கிறார்)

என்னுடைய மகள், எம்பெருமான்மீது நேசம் வைத்துள்ளாள், சிறந்த தோள்களைக் கொண்டவள், கண்ணனுக்கு ஏற்றவள் நப்பின்னை, அவளுக்காக ஏழு எருதுகளைத் தழுவி வென்றவன், கோவலன், குடக்கூத்து ஆடுகிறவன் எம்பெருமான், அவனுடைய திருவடிகளின்மேல் விளங்கும் அழகிய, குளிர்ச்சியான துளசிமாலையை எண்ணி ஒவ்வொருநாளும் நைகின்றாள் இவள்.

*****

பாடல் - 6

மாதர் மா மண்மடந்தைபொருட்டு ஏனமாய்
ஆதி அம் காலத்து அகல்இடம் கீண்டவர்
பாதங்கள்மேல் அணி பைம்பொன் துழாய் என்றே
ஓதும் மால் எய்தினள், என்தன் மடந்தையே.

(தாய் சொல்கிறார்)

என்னுடைய மகள், எம்பெருமான்மீது நேசம் வைத்துள்ளாள், முற்காலத்தில், பெண்களில் சிறந்தவளான பூமாதேவிக்காக வராக அவதாரம் எடுத்தவன், பெருவெள்ளத்திலே மூழ்கிக்கிடந்த பூமியைக் கீண்டு எடுத்தவன் எம்பெருமான், அவனுடைய திருவடிகளின்மேல் விளங்கும் அழகிய, பசும்பொன் போன்ற துளசிமாலையை எண்ணி மயங்குகிறாள் இவள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com