நான்காம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 1,2

திருமேனியில் பூசுகின்ற
நான்காம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 1,2
Updated on
1 min read

பாடல் - 1

கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய், 
                                                                                      மதிள் இலங்கைக்
கோவை வீயச் சிலைகுனித்தாய், குல நல் யானை 
                                                                      மருப்பு ஒசித்தாய்,
பூவை வீயா நீர் தூவிப் போதால் வணங்கேனேலும், நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.

கோவைக்கனி போன்ற சிவந்த வாயைக்கொண்ட நப்பின்னைக்காக, காளைகளின் கழுத்தை முறித்தவனே, மதிளால் சூழப்பட்ட இலங்கையின் தலைவனான ராவணன் விழும்படி வில்லை வளைத்தவனே, நல்ல குலயானையான குவலயா பீடத்தின் கொம்பை ஒடித்தவனே, அந்த நேரங்களிலெல்லாம் நீர்த்துளிகளோடு கூடிய (புதிய) மலர்களைத் தூவி உன்னை நான்  வணங்கவில்லை, எனினும், பூவைப்பூ போன்ற உன்னுடைய திருமேனியில் பூசுகின்ற சந்தனம், என்னுடைய நெஞ்சம்.

******
பாடல் - 2

பூசும் சாந்து என் நெஞ்சமே, புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே, வான் பட்டு ஆடையும் அஃதே,
தேசமான அணிகலனும் என் கைகூப்புச் செய்கையே,
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை, ஏக மூர்த்திக்கே.

ஈசன், உலகை உண்டு உமிழ்ந்த நம் தந்தை, ஏகமூர்த்தி, எம்பெருமானுக்குப் பூசுகிற சந்தனம், என்னுடைய நெஞ்சம். அவர் அணியும் மாலை, என்னுடைய சொற்களால் தொடுக்கப்பட்ட மாலை. அவரது உயர்ந்த பட்டாடையும், என்னுடைய பாமாலைதான். அவர் அணியும் பிரகாசமான அணிகலன்கள், நான் கைகூப்பிச் செய்கிற வணக்கம்தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com