நான்காம் பத்து மூன்றாம் திருவாய்மொழி பாடல் - 11

சிவந்த தாமரை மலர்கள்
நான்காம் பத்து மூன்றாம் திருவாய்மொழி பாடல் - 11
Updated on
1 min read


பாடல் - 11

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி கண்ணன்
                                                                                ஒண்கழல்கள்மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்இல் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.

உய்வதற்கு எம்பெருமானைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை, சிவந்த தாமரை மலர்கள் நிறைந்த வயல்களால் சூழப்பட்டுத் தென் திசையில் உள்ள குருகூர்ச் சடகோபன் இதனை உணர்ந்து, கண்ணனின் ஒளிநிறைந்த திருவடிகளைப் பற்றி ஆயிரம் பாடல்கள் பாடினார். அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் சொல்ல வல்லவர்கள் இவ்வுலகில் பலகாலம் நிலைத்திருந்து ஆள்வார்கள், அத்துடன் பரமபதத்தையும் ஆள்வார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com