கண்கள் காண்டற்கு அரியனாய்,
கருத்துக்கு நன்றும் எளியனாய்,
மண்கொள் ஞாலத்து உயிர்க்குஎலாம் அருள்
செய்யும் வானவர் ஈசனைப்
பண்கொள் சோலை வழுதி வளநாடன்
குருகைக்கோன் சடகோபன் சொல்
பண்கொள் ஆயிரத்து இப்பத்தால்
பத்தர் ஆகக்கூடும், பயிலுமினே.
எம்பெருமானைக் கண்களால் காண்பது அரிது, மனத்தால் உணர்வது எளிது, இந்தப் பூமியில் உள்ள உயிர்கள் அனைத்துக்கும் அருள்செய்கிறவன், விண்ணோருக்கு இறைவன், அத்தகைய பெருமானைப் பற்றி, வண்டுகளின் இசை நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட திருவழுதி எனும் வளமான நாட்டைச் சேர்ந்த திருக்குருகூரின் தலைவர் சடகோபர் இசையோடு கூடிய ஆயிரம் பாடல்களைப் பாடினார், அந்த ஆயிரத்தில் இந்தப் பத்து பாடல்களையும் பயின்றால், நீங்களும் பக்தர்கள் ஆகலாம், பயிலுங்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.