அடிஓங்கு நூற்றுவர் வீய அன்று
ஐவர்க்கு அருள்செய்த
நெடியோனை, தென் குருகூர்ச்
சடகோபன் குற்றேவல்கள்
அடிஆர்ந்த ஆயிரத்துள் இவை
பத்து, அவன் தொண்டர்மேல்
முடிவு, ஆரக்கற்கில்
சன்மம்செய்யாமை முடியுமே.
பெரிய அரசர்களாக வேரூன்றியிருந்த கௌரவர்கள் நூறு பேரும் வீழும்படி ஐந்து பாண்டவர்களுக்கு அன்று அருள்செய்தவன், நெடியோன், எம்பெருமான், அத்தகைய பெருமானின் திருவடிகளை வணங்கி, தென் குருகூர்ச் சடகோபன் ஆயிரம் திருப்பாடல்களை எழுதினார், அவற்றில், அவனது திருத்தொண்டர்களைப் பற்றி அமைந்த இந்தப் பத்து பாடல்களையும் நன்றாகக் கற்கிறவர்கள் யாரோ, அவர்கள் மீண்டும் பிறக்கமாட்டார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.