மூன்றாம் பத்து எட்டாம் திருவாய்மொழி -  பாடல் 1, 2

ஆழ்கடலைக் கடைந்தவனே
Updated on
1 min read

முடியானேஎ, மூஉலகும் தொழுது ஏத்தும் சீர்
அடியானேஎ, ஆழ்கடலைக் கடைந்தாய், புள்ஊர்
கொடியானேஎ, கொண்டல்வண்ணா, அண்டத்து உம்பரில்
நெடியானேஎ, என்று கிடக்கும் என் நெஞ்சமே.

அழகிய திருமுடியைக்கொண்டவனே, மூன்று உலகங்களும் தொழுது போற்றுகிற சிறப்புநிறைந்த திருவடிகளைக்கொண்டவனே, ஆழ்கடலைக் கடைந்தவனே, கருடனை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டவனே, மேகவண்ணனே, தேவர்களுக்கெல்லாம் பெரியவனே... இவ்வாறு எம்பெருமான் பெருமைகளைச் சொல்லிக்கொண்டு கிடக்கும் என் நெஞ்சம்.

•••

பாடல் 2

நெஞ்சமே நீள்நகராக இருந்த என்
தஞ்சனே, தண் இலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனே, ஞாலம் கொள்வான் குறள்ஆகிய
வஞ்சனே என்னும் எப்போதும் என் வாசகமே.

என் நெஞ்சையே தன்னுடைய தங்குமிடமாக ஆக்கிக்கொண்டவனே, என் தலைவனே, குளிர்ந்த இலங்கையின் தலைவனான ராவணனுக்கு நஞ்சாகி அவனை அழித்தவனே, மகாபலியிடம் உலகைப் பெற்றுக் காப்பதற்காக சிறிய உருவில் வந்து அவனை வஞ்சித்த வாமனனே... இவ்வாறு எம்பெருமான் பெருமைகளை நான் எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பேன்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com