மூன்றாம் பத்து எட்டாம் திருவாய்மொழி -  பாடல் 7, 8

சுடர்விடும் சக்ராயுதத்தை
Updated on
1 min read

ஆவியே, ஆர்அமுதே, என்னை ஆளுடைத்
தூவிஅம் புள்உடையாய், சுடர் நேமியாய்,
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பலகாலும்
கூவியும் காணப்பெறேன் உன கோலமே.

என் உயிரே, சுவைமிகுந்த அமுதமே, என்னை ஆளுகின்றவனே, சிறகுடைய கருடனை வாகனமாகக் கொண்டவனே, சுடர்விடும் சக்ராயுதத்தை ஏந்தியவனே, பாவியாகிய நான், நெஞ்சு புலம்பப் பலமுறை கூவினேன், ஆனாலும் உன்னுடைய திருக்கோலத்தைக் காண இயலவில்லையே. அருள்செய்வாய்.

•••

பாடல் - 8

கோலமே, தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன
நீலமே, நின்று எனது ஆவியை ஈர்கின்ற
சீலமே, சென்று செல்லாதன முன்நிலாம்
காலமே, உன்னை எந்நாள் கண்டுகொள்வனே?

அழகின் உருவமே, தாமரை போன்ற கண்களைக் கொண்டவனே, அந்தக் கண்களில் தீட்டுகின்ற மைபோன்ற நீலவண்ணத் திருவுருவத்தைக் கொண்டவனே, என்னுடைய உயிரை அறுக்கின்ற ஒழுக்க வடிவமே, கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என மூன்றுமாகத் திகழ்கிறவனே, உன்னை நான் என்றைக்குக் காண்பேன்?
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com