மூன்றாம் பத்து எட்டாம் திருவாய்மொழி -  பாடல் 11

பூமியை அளந்த பெருமான்
Updated on
1 min read

புலம்புசீர்ப் பூமி அளந்த பெருமானை
நலம்கொள்சீர் நல்குருகூர்ச் சடகோபன் சொல்
வலம்கொண்ட ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
இலங்கு வான் யாவரும் ஏறுவர் சொன்னாலே.

எல்லாரும் கொண்டாடுகிற சிறப்புகளைக் கொண்டவன், பூமியை அளந்த பெருமான், அப்பெருமானை, நன்மையும் சிறப்பும் கொண்ட நல்ல குருகூர்ச் சடகோபர் ஆற்றல்மிக்க ஆயிரம் பாடல்களில் பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் சொல்கிறவர்கள் சிறந்த பரமபதத்தை அடைவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com