மூன்றாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 11

வானவர்களின் தலைவன்
Updated on
1 min read

ஏற்கும் பெரும்புகழ் வானவர் ஈசன் கண்ணன்தனக்கு
ஏற்கும் பெரும்புகழ் வண்குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும்புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர் பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்லவல்லார்க்கு இல்லை சன்மமே.

தகுதிமிக்க பெரும்புகழைக் கொண்ட பெருமான், வானவர்களின் தலைவன், கண்ணன், எம்பெருமான், அப்பெருமானை, தகுதிமிக்க பெரும்புகழைக் கொண்ட, வளம் நிறைந்த குருகூர்ச் சடகோபன் தகுதிமிக்க பெரும்புகழைக் கொண்ட ஆயிரம் பாடல்களால் பாடினார், அவற்றுள், தகுதிமிக்க பெரும்புகழைக் கொண்ட இந்தப் பத்து பாடல்களையும் சொல்லவல்லவர்களுக்கு இன்னொரு பிறப்பு இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com