இரண்டாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 1

தேனும் பாலும் நெய்யும்
Updated on
1 min read

ஊனில்வாழ் உயிரே, நல்லை, போ, உன்னைப் பெற்று
வான்உளார் பெருமான், மதுசூதன், என் அம்மான்
தானும் யானும் எல்லாம் தன்உள்ளே கலந்துஒழிந்தோம்,
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே.

உடம்பிலே வாழும் உயிரே, நல்லதாகிய உன்னைத் துணையாகப் பெற்றேன், அதனால், வானோர் தலைவன், மதுசூதனன், என் தலைவன், எம்பெருமானோடு ஒன்றாகக் கலந்தேன்.

நாங்கள் கலந்த தன்மை, தேனும் பாலும் நெய்யும் கருப்பஞ்சாறும் அமுதமும் ஒன்றாகக் கலந்தாற்போலிருந்தது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com