இரண்டாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 2

உனக்கு ஒப்பாக யாரும் இல்லை
Updated on
1 min read

ஒத்தாரை, மிக்காரை இலைஆய மாமாயா,
ஒத்தாய் எப்பொருட்டும், உயிராய், என்னைப்பெற்ற
அத்தாயாய், தந்தையாய் அறியாதன அறிவித்து,
அத்தா! நீ செய்தன அடியேன் அறியேனே.

எம்பெருமானே, உனக்கு ஒப்பாக யாரும் இல்லை, உன்னை மிஞ்சக்கூடியவர்கள் யாரும் இல்லை, அவ்வாறு சிறந்து விளங்கித் திகழ்கின்ற பெரிய மாயனே, எல்லாப் பொருள்களுக்கும் ஏற்றபடி தோன்றி அவற்றைக் காக்கிறவனே, எங்கள் தந்தையே,

என்னுடைய உயிராக, என்னைப்பெற்ற தாயாக, தந்தையாக வந்து, நான் அறியாதவற்றை அறியச்செய்து நீ செய்தவற்றையெல்லாம் நான் அறியேன்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com