எனது ஆவியுள்கலந்த பெருநல் உதவிக் கைம்மாறு
எனதுஆவி தந்துஒழிந்தேன், இனி மீள்வது என்பது உண்டே?
எனதுஆவி ஆவியும் நீ, பொழில் ஏழும் உண்ட எந்தாய்,
எனதுஆவி யார்? யான் ஆர்? தந்த நீ கொண்டுஆக்கினையே.
ஏழு உலகங்களையும் உண்ட எங்கள் தந்தையே, எம்பெருமானே,
என்னுடைய உயிரிலே நீ கலந்தாய். அந்தப் பெரிய, நல்ல உதவிக்குக் கைம்மாறாக, நான் என்னுடைய உயிரை உனக்குத் தந்தேன், இனி அந்நிலையிலிருந்து நான் மீண்டுவருவது உண்டா? (இல்லை.)
என் உயிரில் உயிர் நீயே, அப்படியிருக்க, நான் உனக்குக் கொடுத்த உயிர் யாருடையது? அந்த உயிரைக் கொடுத்த நான் யார்? எல்லாம் நீதானே! எனக்கு உயிரைக் கொடுத்த நீயே இப்போது அந்த உயிரை உனக்கு உரிமையாக்கிக்கொண்டாய்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.